புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (21:41 IST)

கமல் கட்சியின் சின்னம் என்ன? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்ட கமல்ஹாசன், தனது கட்சிக்கென ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லையாம். இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, 'நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் கேட்டு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்திடம் இருந்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை என கூறியுள்ளது.

அதேபோல் ரஜினி-மூப்பனார் ஆசி பெற்ற 'சைக்கிள் சின்னத்தை ஜிகே வாசன் தனது கட்சிக்கு கேட்டுள்ளதாகவும், தினகரன் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தொப்பி சின்னத்தை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன