1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (10:09 IST)

தம்பிக்காக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் – பின்னணியில் பாஜகாவா ?

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.-ன் தம்பி ஓ ராஜா இன்று மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கடந்த வாரம் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா, தேர்தலில் முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதால் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதில் கொடுமை என்ன்வென்றால் ஓ ராஜாவின் உறுப்பினர் நீக்க அறிக்கையில் கையெழுத்துப் போட்ட இருவர்களில் ஓ. பன்னீர்செல்வமும் ஒருவர்.

கையெழுத்துப் போட்டாலும் அதன் பிறகு ஈ.பி.எஸ். மீது கடுமையானக் கோபத்தில் இருந்திருக்கிறார் ஓ.பி.எஸ். கட்சியில் தனக்கான அதிகாரம் கைநழுவிப் போய்க் கொண்டே இருப்பதை உணர்ந்த ஓ.பி.எஸ்.தம்பியை மீண்டும் கட்சியில் சேர்க்க அதிமுக முன்னணி நிர்வாகிகள் மூலம் காய்நகர்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால் எதற்கும் எடப்பாடி மசியவில்லை. அதனால் தனது பிரம்மாஸ்திரமாக பாஜக வை நாடி தனது தம்பியை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளதாகப் புது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ.பி,எஸ். தர்மயுத்தம் நடத்தியக் காலத்தில் இருந்தே அவருக்கும் டெல்லி பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்.அணிகள் இணைப்பில் பாஜக முக்கியப் பங்கு வகித்ததாகவும் ஒரு செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ்.ஸுக்கும் டெல்லியில் உள்ள பாஜக பிரமுகர்களிடம் அப்பாயிண்டமெண்ட் இல்லாமல் பேசும் அளவுக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தனது தம்பி பிரச்சனையில் நேரடியாக பாஜக தலைமையிடம் பேசி தனக்கு சாதகமான முடிவை வரவைத்திருக்கிறாராம். இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் பாஜக வும் ஓ.பி.எஸ். வேண்டுகோளுக்கு தலையசைத்திருப்பதாகத் தகவகள் வெளியாகியுள்ளன.