தொடர்புடைய செய்திகள்
- அதிமுக எம்.பி தேர்தல் பிரச்சாரத்தின்போது மரணம்!
- சீப்பை ஒளித்து வைத்தால் எல்லாம் முடிந்துவிடுமா? சன் செய்திகளுக்கு திமுக எம்பி பதிலடி!
- ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
- சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்குவிப்பு; திமுக எம்.பி சொத்துக்கள் முடக்கம்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
- திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி
திமுக எம்.பி., கனிமொழி வீடு திரும்பினார் …
சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி இன்று வீட்டுக்குத் திரும்பினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி தொகுதி எம்பியும், திமுக நிர்வாகியுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பாஜக வேட்பாளர் குஷ்பு கனிமொழி குணமடைய வேண்டுமென டுவீட் பதிவிட்டார்.
நேற்று மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி கனிமொழி இன்று வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
