சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்குவிப்பு; திமுக எம்.பி சொத்துக்கள் முடக்கம்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கள்ளக்குறிச்சி எம்.பியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.பியாக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த கவுதம சிகாமணி. இவர் அந்நிய செலவாணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை எம்.பி சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து எம்.பி கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.