ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (21:31 IST)

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அதிரடி அறிவிப்பு

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அவ்வப்போது நடைபெற்று அரசியல் விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வரும் 9-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெற இருப்பதாக திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
கழகத்தலைவர் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 09.03.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் நடைபெறும். 
 
அப்போது சட்டமன்ற கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலை சந்திப்பது, பொதுத்தேர்தலில் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது