1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (17:33 IST)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் தி.மு.க கொடிகள் – கரூரில் கலகலப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் தி.மு.க கொடிகள் – கரூரில் கலகலப்பு

தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு நாளை வர உள்ளார். கரூர் அடுத்த  காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை(5ம் தேதி) அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரிக்கு வருகை தந்து முறைப்படி திறந்து வைக்கும் நிகழ்ச்சி அன்று மதியம் நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிமுக கரூர் மாவட்ட கழகம் சார்பில் ஆங்காங்கே கட்சி கொடிகள் கட்டப்பட்டு, சாலைகளின் ஒரத்தில் அதிமுக கொடிகள் நேற்றே நடப்பட்டு இன்றும் ஆங்காங்கே பிரகாசமாக பறந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க கட்சி கொடிகளும் ஆங்காங்கே கட்டப்பட்டு, அதுவும் அதிமுக கட்சி கொடிகளுக்கு நடுவே திமுக கட்சி கொடிகள் உள்ளது ? ஒருவேலை ஏற்கனவே திமுக கட்சியிலிருந்து ஏராளமான தி.மு.க கட்சியினர் அதிமுக வில் இணைந்து வரும் நிலையில், திமுக வினரே பச்சைக்கொடி காட்டும் செயல் போலவாகவும், அதே நிலையில் கரூருக்கு திடீரென்று திமுக இளைஞரணியினை சார்ந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக என்று கூறப்படும் நிலையில், ஏன் ? திடீரென்று அவரை அழைத்து அவசர அவசரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தினையொட்டி ரேக்ளா ரேஸ் நிகழ்ச்சியினை நடத்துவது ஏன் ? என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுக நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு மாநில முதல்வரே கரூருக்கு வரும் நிலையில், அதே தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக வும் நிகழ்ச்சி நடத்துவது தான் ஏன் ? என்று புரியாத புதிராக உள்ளது