வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (17:41 IST)

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மருத்துமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மருத்துமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.  மேலும் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கட்டடம் மற்றும் 1.2 கோடியில் கட்டப்பட்ட கட்டிடத்தினையும், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதலமைச்சர்  பழனிசாமி கரூரில் இருந்தே திறந்து வைத்தார்.  

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு  விழா நிகழ்ச்சியானது விழாக்கோலம் பூண்ட மாதிரி கரூர் காட்சியளித்தது.