செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:11 IST)

அண்ணாமலைக்கு வாழ்த்துக் கூறிய திமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. அவர் கட்சியில் சேர்ந்த இரண்டே நாட்களில் அவருக்கு பாஜகவில் துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாஜகவில் இணைந்ததற்கும், தற்போது துணை தலைவர் பதவி பெற்றதற்கும் அண்ணாமலைக்கு பாஜகவினர் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ திடீரென திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து ’இளைஞர்கள் கையில் நாளைய எதிர்காலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணாமலையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ குக செல்வம் தற்போது திமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் இன்னும் அவர் அதிகாரபூர்வமாக பாஜகவில் சேரவில்லை. இருப்பினும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது