திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (17:10 IST)

சி எஸ் கே அணியில் கொரோனா பாதிக்கபட்ட பவுலர்கள் யார்? வெளியான தகவல்!

சி எஸ் கே அணியில் ஒரு பவுலர் உட்பட 13 பேருக்கு கொரோனா பரவியதாக செய்திகள் வெளியான நிலையில் அது யார் என்பது வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்த பவுலர் சென்னையைச் சேர்ந்த தீபக் சஹார்தான் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் என்ற பவுலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.