செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (08:02 IST)

ஜெ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது ? மருத்துவமனையில் இருந்து பாஸிட்டிவ் தகவல்!

தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இப்போது அளிக்கப்படும் செயற்கை சுவாசம் குறைக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவருக்கு வெண்ட்டிலேட்டர் மூலமாக 80 சதவீத ஆக்ஸிஜன் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு 40 சதவீதமாக்கப்பட்டுள்ளது.

60 சதவீதம் அவராகவே சுவாசிப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்தின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.