பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: திமுக அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படும். பிப்ரவரி 17-ல் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் பணிகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருப்பதால், அதற்கு பிந்தைய தேதியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
Edited by Siva