புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (09:48 IST)

ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே! – இதுவும் பிரசாத் கிஷோர் ஐடியாவா?

திமுகவில் உள்ளவர்களையும், புதிதாக இணைபவர்களையும் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைக்கும் பணியை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.

எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக பல வழிகளிலும் தயாராகி வருகிறது. இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக, இதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் போன்றவர்களையும் நியமித்துள்ளது.

திமுக தனது கட்சி தொடர்பான தகவல்களையும், செய்திகளையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள இன்றைய தலைமுறையில் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றுவதை உணர்ந்துள்ளது. அதனால் திமுகவில் இணைந்துள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ட்விட்டரில் “ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே” என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதன்மூலம் ஒருவரையொருவர் ஃபாலோ செய்து திமுகவின் பலத்தை சமூக வலைதளத்தில் அதிகரிக்க முடியும், மேலும் இது தேர்தல் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது திமுகவிற்கு அரசியல் ஆலோசகராக பிரசாத் கிஷோர் களம் இறங்கியிருப்பதால் இதுவும் அவரது ஐடியாக்களில் ஒன்றா என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.