1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (18:09 IST)

’வீரத்தின் விலைநிலமே’... உடன்பிறப்புகளின் ஆர்வக் கோளாறு ? ஒரு எழுத்தில் மாறிய அர்த்தம் !

’வீரத்தின் விலைநிலமே’... உடன்பிறப்புகளின் ஆர்வக் கோளாறு ? ஒரு எழுத்தில் மாறிய அர்த்தம் !

சுதந்திர இந்தியாவின் காலக்கட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அறிஞர் அண்ணா தோற்றுவித்த திமுக மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்தது.
 
பேரறிஞர் அண்ணாவி தம்பிகளான நெடுஞ்செழியன், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் , மதியழகன் , சம்பத் போன்ற தலைவர்கள் பெரியாரின் குருகுலத்தில் பாடம்கற்று திறமையான பேச்சாற்றல் மூலம் பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்தனர்.
 
மேடைத் தமிழ் மற்றும் உரைநடைத்தமிழுக்கும் பெரும் தோற்றுவாய் கொடுத்து தமிழை இலக்கியத்தில் தூக்கிப்பிடித்தனர்.
 
இந்நிலையில், திமுகவின் உடன்பிறப்புகள் ஸ்டாலின் படத்தை அச்சிட்டு ஒரு பிளக்ஸ்  பேனர் வைத்துள்ளனர். அதில் ’’வீரத்தின் விளைநிலமே’’ என்பதற்குப் பதில் ’’விலை நிலமே’’ என்று பதிவிட்டுள்ளனர்.
 
கவனக்குறைவாகப் பதிவிட்டிருந்த இந்த பேனர்  புகைப்படமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

கடந்த வருடம் சுபஸ்ரீ என்ற பெண் சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து மரணம் அடைந்ததால், திமுகவினர் பிளக்ஸ் பேனர் வைக்கமாட்டோம் என பிரமாணப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.