டெல்லி விவசாயிகள் போராட்டம்: திமுக முக்கிய அறிவிப்பு

anna arivalayam
டெல்லி விவசாயிகள் போராட்டம்: திமுக முக்கிய அறிவிப்பு
siva| Last Updated: புதன், 2 டிசம்பர் 2020 (16:36 IST)
டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்பது வேளாண் மசோதாவை திரும்பப் பெறுவது ஒன்றே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்த திமுக முடிவு செய்துள்ளது

இதனை அடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது
நாளை காலை 10 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :