செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick

பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு! – திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ கைது!

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கலில் பிரதமர் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 32 விவசாய சங்கங்களுடன் நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், மீண்டும் நாளை பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. இதனால் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் திண்டுக்கலில் பரபரப்பு எழுந்துள்ளது.