விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கிரேட் ஹாளி!

Last Updated: புதன், 2 டிசம்பர் 2020 (15:52 IST)

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீரர் தி கிரேட் காளி ஆதரவு அளித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல்
7வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் ஆதரவுகள் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்தவரும் அமெரிக்காவின் WWE குத்து சண்டை வீரருமான தி கிரேட் காளி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :