திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (10:59 IST)

அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - ஜி.கே.வாசன் !

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விவசாய மசோதாவிற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை விமர்சித்துள்ளார். 
 
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல்  7வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது. குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் அப்பாவி விவசாயிகள் பலியாகக்கூடும் என பேசியுள்ளார்.