வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , புதன், 13 மார்ச் 2024 (08:53 IST)

குஷ்பு,அண்ணாமலையின் உருவ படங்களை தலை கீழாக பிடித்து-திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

தி மு க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை தொகை. குடும்ப தலைவிகளுக்கான இந்த  திட்டத்தை தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையை பிச்சை எனவும்,அதை வாங்கும் பெண்கள் எல்லாம் பிச்சைக்காரிகள் என்ற தொனியில் செய்தியாளர்களிடம் சமீபத்தில்  பேசிய நடிகையும்,பா.ஜ.க மகளிர் ஆணைக்குழுவின் தலைவரும் ஆன குஷ்பு 
 
இதை கண்டித்து கன்னியாகுமரி இரயில் நிலையம் முன்பு திமுக மகளிர் அணியின் துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஹெலன் டேவிட்சன் தலைமையில் சுமார் 100-க்கும் அதிகமான பெண்கள்,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை குஷ்புவின் படங்களை தலை கீழாக பிடித்து கொண்டு பாஜக, குஷ்பு,அண்ணமாலைக்கு எதிராக கண்டன கோசம் எழுப்பினர்.
 
பெண்களின் கையில் இருக்கும்  படங்களை தலை கீழாக பிடித்திருப்பதின் அடையாளம்.  நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில்,இந்தியா முழுவதும் பாஜகவின் அரசு கவிழ்ந்து விடும் என்பதின் அடையாளம் என தெரிவித்துள்ளார். முன்னாள் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணியின் துணைத் தலைவர் ஹெலன் டேவிட்சன்.
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில். அண்ணாமலை, குஷ்பு படங்களை பெண்கள் சாலையில் போட்டு வாரியலால் அடித்தும், செருப்பு காலால் மிதித்தும்,அண்ணாமலை,குஷ்புவின் படங்களை துண்டு, துண்டுகளாக கிழித்து போட்டும் தங்களது கண்டனத்தையும்,எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.