1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Functionary Arasakumar Under Fire: School Recognition Scam Exceeds ₹200 Crore

திமுக பிரமுகர் அரசகுமார் மோசடி: ரூ.200 கோடியைத் தாண்டும் பள்ளி அங்கீகார முறைகேடு!

அரசகுமார் கைது
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு தேவையான அரசு அங்கீகாரத்தை பெற்று தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் திமுக பிரமுகர் அரசகுமார் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இவர் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை சுருட்டியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், தற்போது தீவிரமடைந்துள்ள போலீஸ் விசாரணையில் இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன.
 
கைது செய்யப்பட்ட அரசகுமாரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் அவர் பணம் பறித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை தற்போது 200 கோடி ரூபாய்க்கும் அதிகம் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.
 
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மிரட்டியும், ஆசை வார்த்தைகளை கூறியும் இந்த இமாலய தொகையை அவர் வசூலித்ததாக கூறப்படுகிறது. இன்னும் பல பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதால், இந்த மோசடி தொகை மேலும் பல கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தமிழக கல்வித்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
Webdunia