திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (00:26 IST)

முலாம் பழத்தில் நிறைந்துள்ள விட்டமின்கள்

முலாம்பழம் வெயில் காலங்களில் அதிக அளவு மக்களால் விரும்பி வாங்கப்படக் காரணம் அது உடல் சூட்டினைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியினை ஏற்படுத்துவதால்தான் ஆகும்.
 
முலாம் பழமானது சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சிறுநீர் போகும்போது எரிச்சல், நீர்க் கடுப்பு போன்றவற்றிற்குத் தீர்வாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு முலாம்பழத்தை கொடுத்தால் கருவளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
 
 
முலாம் பழத்தில் விட்டமின் ஏ நிறைந்து இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஆதலால் கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
 
முலாம்பழமானது மூல நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கச் செய்கின்றது, மேலும் மலச் சிக்கல், வயிற்று வலி, செரிமானப் பிரச்சினைகள், பசியின்மை போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
 
முலாம் பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கலை நீக்குகிறது. பழச்சாறு பருகாமல் முலாம் பழத் துண்டுகளை உண்ணும் போது நார்ச்சத்து முழுவதும்  கிடைக்கும்.
 
முலாம் பழமானது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யவும் செய்கின்றது.
 
முலாம்பழம் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும், கல்லீரலை சுத்தம் செய்வதாகவும் உள்ளது, மேலும் முலாம்பழல் அல்சர் என்னும் வாய்ப்புண், குடல் புண் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.