1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Candidate list to be announced on March 10th

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 10 ஆம் தேதி ரிலீஸ்!

TN Elections 2021
சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது. 

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்  டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 
 
திமுகவின் விருப்ப மனு கடந்த 17 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது, இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, இதில் 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டு உள்ளனர்.  
 
அதிகபட்சமாக 7 நாட்கள் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது என திமுக மாவட்ட செயலாளர்களிடம் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி