வதந்திகளை நம்ப வேண்டாம்... தினேஷ் குண்டுராவ் தடாலடி!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 5 மார்ச் 2021 (07:45 IST)
மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தினேஷ் குண்டுராவ் தகவல். 

 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி கமல் தலைமையிலான மூன்றாவது கூட்டணியில் இணையும் என்று கூறப்பட்டது.
 
ஆனால் செய்தியாளர்களை நேற்று சந்தித்த கே.எஸ்.அழகிரி மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெறும் என்றும் கூறியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் விதிகளை ராகுல்காந்தி மீறவில்லை எனவும் அவர் மீதான புகார் தவறானது. எனவே பாஜக அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் எனவும் அவர் கூறியதுடன், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :