தொடர்புடைய செய்திகள்
- மதுபானம் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது! – போலீஸார் எச்சரிக்கை!
- என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் லட்சுமி நாராயணன் !
- புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பிற்கு கிரண்பேடி மறுப்பு : நாராயணசாமி தகவல்!
- வெட்கமான செயலுக்கு குடியரசு என்ற பெயரா? கமல் கேள்வி!!
- கேடில் விழு செல்வம் குறளை சுட்டிக்காட்டிய பிரதமர்! – புதுச்சேரியில் உரை!
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா என்.ஆர்.காங்கிரஸ் ?
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டும் என இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறி ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக மாவட்ட செயலாளர் நாஜிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டும் என இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை என்.ஆர்.காங்கிரஸ் ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
