வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : ஞாயிறு, 4 ஜனவரி 2026 (13:32 IST)

பொங்கல் பரிசு!.. திமுக கேட்டது 5 ஆயிரம்.. கொடுத்தது 3 ஆயிரம்!.. ஒரு பிளாஷ்பேக்!...

stalin
கடந்த சில வருடங்களாகவே பொங்கலின் போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்போடு சேர்ந்து பொங்கல் பரிசம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது 2,500 பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்டது.
அப்போது ‘மக்களுக்குதானே கொடுக்கிறீர்கள்.. 5 ஆயிரமாக கொடுங்கள் என அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசியிருந்தார்கள்.

இப்போது திமுக ஆட்சியில் இருக்கும் நிலையிலும், 2026 சட்டமன்ற தேர்தல் வருவதாலும் பொங்கல் பரிசாக திமுக அரசு மக்களுக்கு எவ்வளவு கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. சிலர் 2 ஆயிரம் எனவும், சிலர் 3 ஆயிரம் எனவும் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். இதனால் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கிறார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். பொங்கல் பரிசாக 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. அதோடு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப்பரிசும், பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்’ என மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து, நாங்க 2,500 கொடுத்தபோது 5 ஆயிரமாக கொடுங்கள் என கேட்ட திமுக இப்போது 3 ஆயிரம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறது என அதிமுகவின் பேச துவங்கிவிட்டனர்.