1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜனவரி 2026 (10:01 IST)

அதிமுக - திமுக.. யார் ஓட்டுக்களை அதிகம் பிரிக்கிறார் விஜய்? சமீபத்திய கருத்துக்கணிப்பு..!

அதிமுக - திமுக.. யார் ஓட்டுக்களை அதிகம் பிரிக்கிறார் விஜய்? சமீபத்திய கருத்துக்கணிப்பு..!
சமீபத்திய, புள்ளிவிவரங்களின்படி விஜய்யின் வாக்கு வங்கி பெரும்பாலும் திமுகவின் கூட்டணிக்குள் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை குறிவைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
 
திமுகவின் கோட்டையாக கருதப்படும் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, திமுகவின் வாக்கு சதவீதத்தை சற்றே குறைக்க வாய்ப்புள்ளது. மறுபுறம், திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே நம்பியிருக்கும் அதிமுகவிற்கு, அந்த வாக்குகளை பிரிக்கும் ஒரு 'மூன்றாவது ஆப்ஷனாக' விஜய் உருவெடுத்துள்ளார். இது அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் எனச் சில கணிப்புகள் எச்சரிக்கின்றன.
 
விஜய்யின் தவெக கட்சி நடத்திய கருத்துக்கணிப்பில்  அந்த கட்சி 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சதவீதத்தை பெறும் என உரிமை கோரியுள்ளது. 
 
இறுதியாக, 2026 தேர்தல் என்பது ஒரு 'மும்முனைப் போட்டியாக' மாறப்போவது உறுதியாகியுள்ளது. இதில் விஜய் பிரிக்கும் ஓட்டுக்கள் திமுகவிற்கு சாதகமாக அமையுமா அல்லது அதிமுகவின் வாக்குகளை பறித்து திமுகவை வீழ்த்த உதவுமா என்பதுதான் தற்போதைய மர்மம். 
 
Edited by Siva