தொடர்புடைய செய்திகள்
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எப்படி இருக்கிறார்?
- கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
- இப்படியே நிர்வாகிகளை நீக்கினா கட்சி என்னாகும்? – அதிமுகவிற்கு நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி!
- பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!
- வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!
ஆளுங்கட்சி திமுக தான்: அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் பேட்டி
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தான் ஆளும் கட்சி என்றும் அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த்கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுக கூட்டணி கண்டிப்பாக ஆளும் கட்சியாகவும் என்றும், அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 50 இடங்கள் கூட கிடைக்காது என்றும் தமிழகத்தில் தான் வகுத்துக் கொடுத்த திட்டங்களை பார்த்து அதிமுக கூட்டணி அஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டார்
அதேபோல் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணிக்கு 100 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் பாஜகவுக்கு நிச்சயம் மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய தோல்வி கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் என்றும் கூறினார். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் அவரை இப்போதைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் யாரும் அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
