தொடர்புடைய செய்திகள்
ஏப். 16 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும் - ஆட்சியர் உத்தரவு!
தொழிற்சாலை, ஓட்டல், கடைகளில் பணிபுரிவோர் 16 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும் என வேலூர் ஆட்சியர் உத்தரவு.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே, தொழிற்சாலை, ஓட்டல், கடைகளில் பணிபுரிவோர் 16 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும் என வேலூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்படி கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் என எச்சரித்துள்ளார். மேலும் வர சந்தைகளுக்கு தடை விதித்துள்ளார். காய்கறி கடைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி, கல்லூரி வளாகங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
