திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (09:11 IST)

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்… ராகுலின் அதிரடி முடிவு!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வருகிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னும் தொகுதிப் பங்கீடு முடிந்த பாடில்லை. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திமுக மற்றும் காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட சம்மதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளதாம். அப்படி குறைந்தால் கூட்டணிக் குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ராகுல் தரப்பில் சொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் திமுகவோ 20 தொகுதிகளுக்கு குறைவாகக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாம். இதனால் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளதாம்.