திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (22:57 IST)

சசிகலாவை சந்தித்த பிரபல சினிமா இயக்குநர்!

பிரபல சினிமா இயக்குநர் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனார்.

 அவரது வருகை தமிழகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்கள் அவரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

ச.ம.க கட்சித்தலைவர் சரத்குமார் மற்றும்  அவரது மனைவி இருவரும் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அநேகமாக தேர்தல் கூட்டணி உருவாகும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று The iron Lady என்ற திரைப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி சென்னை திநகரில் வசித்து வரும் சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து  புகைப்படங்கள் பரவலாகி வருகிறது..