வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anamdakumar
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (23:57 IST)

உழைப்பினை மதிக்க தெரியாத கட்சி திமுக -முன்னாள் தி.மு.க நகர்மன்ற தலைவர்

பிறரின் உழைப்பினை மதிக்க தெரியாத கட்சி ஆகையால் தான் அந்த (திமுக) கட்சியை எதிர்த்து போட்டியிடுகின்றேன் – வை.கோ திமுக வை விட்டு சென்ற போது கூட நான் போகாதவன் அப்படிபட்ட என்னை 5 கட்சி மாறி வந்தவர் கட்சி மாறுவதாக கூறி எழுதிகொடுத்து எந்த வித விசாரணையும் இல்லாமல் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் அந்த கட்சியை எதிர்த்து போட்டியிடுகின்றேன் சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் தி.மு.க நகர்மன்ற தலைவரின் தேர்தல் பிரச்சாரம்
 
தமிழக அளவில் மட்டுமில்லாமல் கூகுள், ஆட்சென்ஸ், youtube, பேஸ்புக், டுவீட்டர் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர்றப்போறாரு என்றும், விடியலைத்தேடி ஸ்டாலின் குரல் என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பரங்கள் செய்து வரும் திமுக கட்சி,  கரூர் மாவட்ட அளவில் நாளுக்கு நாள் மிகுந்த சோதனைக்காலமாகி வருகின்றது காரணம், திமுக கரூர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதோடு, அப்போது வந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு சீட் என்பதனால் தான், மேலும், அவரே நமது தி.மு.க கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து சுமார் 15 ஆண்டுகாலம் அதிமுக வில் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட அதிமுக செயலாளர் பின்பு அமைச்சர் என்றெல்லாம் இருந்த நிலையில்., கடந்த 2011 ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக கட்சியில் திமுக வினை கடுமையாக சாடி ஒட்டு கேட்டு, அன்று முதல் சுமார் 4 ¾ வருடம் அமைச்சராக இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடாக பல்வேறு பிரமுகர்களுக்கு ஊராட்சி தலைவர் முதல் ஒன்றியக்குழுத்தலைவர் வரை என்றெல்லாம் பொறுப்புகள் போட்டு, எதிர்த்து நின்ற ஏராளமானவர்களை கைது செய்தும், ஆள்மாறாட்டம், சொத்துக்களை மிரட்டி வாங்கியது என்றெல்லாம் பல்வேறு புகார்களை உடைய அதிமுக டூ அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று கட்சி மாறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திமுக கட்சிக்கு வந்தவரை, அந்த கட்சி அரவணைத்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு திடீரென்று மாவட்ட பொறுப்பாளர் பதவி திமுக வில் கொடுத்தது ஏராளமான நபர்களுக்கு பிடிக்காத நிலையில், எம்.எல்.ஏ க்கள் தகுதிநீக்க வழக்கில் அரவக்குறிச்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திடீரென்று கட்சி தலைமை அவருக்கே எம்.எல்.ஏ சீட் கொடுத்தும் அவரை ஜெயிக்க வைத்தது. இந்நிலையில்., தேர்தலுக்கு முன்னரே செந்தில்பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆவராம், மீண்டும் போக்குவரத்து துறை அமைச்சரும் ஆவராம் என்றெல்லாம் கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் தவிர மற்ற நபர்கள் அனைவரும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்குகள் சேகரித்தனர். இந்நிலையில், அவர் மட்டுமே ஜெயித்ததால் ஆட்சி மாறாத நிலையில் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் செந்தில்பாலாஜியின் செயல்கள் பிடிக்காமல் நாளுக்கு நாள் அவருடைய போக்கு பிடிக்காமல் அவரை பிடிக்காமல் தொண்டர்கள் அதிகரித்த நிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுகட்சிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் மாநில நிர்வாகிகள் கூட திமுக வில் இருந்து மாறி வரும் நிலையில் தற்போது திமுக கட்சியின் முன்னாள் நகர்மன்ற தலைவரும் களத்தில் இறங்கியுள்ளது பெரும் சர்ச்சையையும், செந்தில்பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தி உள்ளது
 
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியினை சார்ந்தவர் பெ.ரவி (வயது 56), பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் (Bus body Builders), மற்றும் நிதி நிறுவனம் பங்குதார்ராக இருந்து வருகின்றார். ஏற்கனவே இதே பகுதியில் தாந்தோன்றி நகராட்சியின் தலைவராக 2001 டூ 2006 என்று செயல்பட்டு அப்போதைய அதிமுக ஆட்சியிலும் தவறுகளை சுட்டிக்காட்டி, தனக்கு வாக்களித்த மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றியவர், கூடவே சொல்ல வேண்டுமென்றால், நகராட்சியின் மொத்த நிதியினையும் முறைகேடாக பயன்படுத்தாமல், மக்களின் நலனுக்காக முழுக்க முழுக்க திட்டங்கள் தீட்டி அப்பகுதி மக்களின் நன்மதிப்பினை பெற்றவரும் ஆவார், மேலும் பின்பு நடைபெற்ற நகராட்சி தேர்தலிலும் அதாவது 2006 டூ 2011 ஆகிய தேர்தலில் நகர்மன்ற உறுப்பினராகவும், மறைமுக தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக கட்சியானது இவருக்கு கவுன்சிலர் சீட் கொடுத்து இவரது மனைவிக்கு தலைவர் பதவிக்கான சீட்டு கொடுத்த்து குறிப்பிட்த்தக்கது. அப்போது தேர்தலில் அதிமுக வேட்பாளரின் டெபாசிட் இழக்க வைத்த வரும் ஆவார். அந்த டெபாசிட் இழந்த அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் தற்போது கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் குடியரசு ஆவார். பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தினை சார்ந்த இவர், 1975 லிருந்து திமுக கட்சிக்காக பாடுபட்டு 1984 ஆம் ஆண்டு திமுக தாந்தோன்றி பேரூர் கிளை செயலாளராகவும், அதன்பிறகு 1991 ல் தாந்தோன்றி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும், 1993 ல் திமுக கட்சிக்கு சோதனை ஏற்பட்ட போது அதாவது திமுக வினை விட்டு வை.கோ வெளியேறிய நாளிலும் தாந்தோன்றி ஒன்றிய கழக பொறுப்பினை திமுக வில் ஏற்று திறம்பட செயலாற்றி, சுமார் கால் நூற்றாண்டு காலம் ஜெயலலிதா, ஜானகி என்று அதிமுக பிரிந்த காலத்தில் கூட வெற்றி பெற முடியாத கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை நாகரத்தினம் என்பவரை வெற்றி பெற செய்வதில் அவர் வாங்கிய 30 ஆயிரம் வாக்குகளில் கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கிடைக்கப்பெற்ற வாக்கு, 15 ஆயிரம் ஆகும், ஆனால் இவர் (பெ.ரவி) ஒன்றிய பொறுப்பாளராக பணியாற்றிய தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியில் மட்டும் 15 ஆயிரம் வாக்குகள் என்று முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினையே கணக்கு போட வைத்தவர். 1997 ல், தற்போது உள்ள திமுக வில் உள்ள முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அப்போது அதிமுக வில் இருந்த போது அவரே அதிமுக விற்கு அழைத்த போதும் செல்லாத பெ.ரவி, இப்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அதிமுக வில் இருக்கும் போதும் அவர் அழைத்தும் செல்லாதவர் ஆவார். இந்நிலையில், இவர் அதிமுக வில் இணைவதாக பொய்யான தகவலை கட்சியின் தலைமையிடத்தில் புகார் கூறி. அந்த தலைமை எந்த விதமான விசாரணையும் இன்றி 2019 ஏப்ரல் மாதம் 12 ம் தேதி அவரை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியுள்ளது., அன்றே அவர், வரும் 2021 ம் ஆண்டில் சுயேட்சை வேட்பாளராக நிற்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், தான் வந்த கட்சிக்கு நான் யார் என்பதனை நிருபிக்கும் பொருட்டும் மட்டுமில்லாமல் திமுக வில் யார் நின்றாலும் கரூர் தொகுதியில் தோற்கடிப்பதே எனது இலட்சியம் என்று கடந்த பொங்கல் அன்று ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து நூதனமாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் உங்கள் வேட்பாளர் பெ.ரவி உடைய பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்றெல்லாம் கூறி வந்த இவர், தற்போது தேர்தல் தேதி அறிவித்ததையடுத்து படுஜோராக தேர்தல் பணியாற்றி வருகின்றார். மேலும் தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு இணங்க, கொரோனா இடைவெளி விட்டும், தேர்தல் பிர்ச்சாரம் சின்னம் இன்னும் அறிவிக்க வில்லை வரும் 23 ம் தேதி எனக்கு என்று சுயேட்சைக்காக சின்னம் ஒதுக்கிய பிறகு மேலும் பிரச்சாரம் தீவிரப்படுத்துவேன் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.எல்.ஏ ஆன பிறகு தனக்கு கிடைக்கும் மாத சம்பளம் ரூ 1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தினை வருடத்திற்கு ஒருமுறை என்று மொத்தம் 12 மாதத்திற்கு என்று கணக்கிட்டு ரூ 12 லட்சத்து 60 ஆயிரம் என்று மொத்தமாக கணக்கிட்டு அதனை இயலாத மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயில 5 வருடமும் நான் பாடுபடுவேன் என்றும் ஆங்காங்கே கூறி வாக்குகள் சேகரித்து வருகின்றார். கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட டி.செல்லாண்டிப்பாளையம் பகுதியில் உள்ள வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் எளிமையான முறையிலும், மக்களிடம் வாக்குகள் கேட்கும் போதும் அவரிடம் உள்ள பணிவும் அதன் மூலம் வாக்குகள் சேகரிப்பதன் மூலம் மக்களை கவர்ந்து வருகின்றார்.