வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:23 IST)

ஃப்ரைட் ரைஸ் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து! – குழந்தையின் செயலால் நெகிழ்ந்த முதல்வர்!

MK Stalin
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு பெண் குழந்தை உணவு கொடுத்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 72 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியே தொடர் பிரச்சாரங்களால் திருவிழா கோலமாக காட்சியளித்தது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஈரோடு கிழக்கு தொகுதி சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தற்போது மார்ச் 1ல் தனது பிறந்தநாள் வர உள்ள நிலையில் அதுகுறித்து வாழ்த்து மடல் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் அவர் “ஈரோட்டில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது ஒருவர் ஓடிவந்து தன் பெண் குழந்தையின் கையில் ஃப்ரைட் ரைஸை கொடுத்து என்னிடம் தர சொன்னார். எனது தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில் அதை செய்த அந்த தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை கண்டேன்” என கூறியுள்ளார்.

மேலும் “அந்த குழந்தை என்னிடம் உணவை தந்தவுடன் “அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தாத்தா” என்று வாழ்த்து தெரிவித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K