செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (15:38 IST)

கத்ரீனா, கஜோலை தொடர்ந்து டீப்பேக் வீடியோவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்!

வலைதளம் மூல்ம மருந்து வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவது போன்ற  வீடியோ வைரலாகி வருகிறது.
 
ஏஐ தொழில் நுட்பம் மூலம் சமீக காலமாக பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. பிரபலங்களின் முகத்தை அதில் போலியாக பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
ஏற்கனவே,  நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரினா  உள்ளிட்டோர் இதில் பாதிக்கப்பட்ட நிலையில்,  சச்சினின் மகள் சாராவின் டீப்ஃபேக் புகைப்படம் வைரலானது. இதற்குப் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் இந்த டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ 41விநாடிகள் ஓடக்கூடது. அதில், இந்த மருந்து இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வலைதளம் மூலம் வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று பேசுவது  போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 
மேலும், இதில், இந்தியாவில் டயாபடீஸ் வெற்றி பெற்றுள்ளது. டயாபடீஸுக்கு குட்பை சொல்வோம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
 
இதைப்பகிர்ந்த கிரேஸ் கார்சியா என்ற பேஸ்புக்  கணக்கிற்கு எதிரான  வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.