வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (17:09 IST)

சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த இஸ்லாமியர்களை பாஜக அரசு வஞ்சிப்பதை ஏற்க முடியாது! - ஜி.ஜி.சிவா கண்டனம்!

G G Siva
தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர்  ஜி.ஜி.சிவா வெளியீட்டுள்ள கண்டன அறிக்கையில்....


 
2014 ல் எப்போது பாஜக மத்தியில் ஆட்சியில் வந்ததோ அதிலிருந்து தான் இந்தியா முழுவதும் மதவாதம் தலைக்கேறி இந்தியாவினுடைய பன்முகத்தன்மை மெல்ல மெல்ல சிதைந்து கொண்டு இன்று இந்துத்துவாவாதிகளின் பிடியில் ஜனநாயகம் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீலா துயரத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்கின்ற கோஷத்தை இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலே திட்டமிட்டு அவர்கள்  மீது திணித்து அவர்களை சித்திரவதை செய்வதற்காகவே அந்த வார்த்தையை கண்டுபிடித்தது போன்று இன்று இந்தியா முழுவதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லி இஸ்லாமியர்களை துன்புறுத்தி வருகிறார்கள்.

இன்றைய CAA அதாவது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை 2019 ல் கொண்டு வந்து நாடு முழுவதும் எதற்கு கண்டன குரல்கள் எழும்பியதன் காரணமாக கொஞ்சம் மத்திய அரசு இடைவெளியில் வைத்திருந்தது ஆனால் இப்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் மையப்படுத்தி நாடு முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் பெருமளவில் மதவாத சக்திகள் இடம் சிக்கி பல துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது போதாது என்று இப்போது இந்த சட்டத்தையும் அமல்படுத்தி அவர்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து இருக்கிறது.

ஆனால்  எந்த இஸ்லாமியர்களை துன்புறுத்தி நாட்டு மக்களிடத்திலும் தனிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களோ அதே இஸ்லாமியர்கள் தான் நாடு சுதந்திரம் அடைய பல லட்சம் பேர் உயிர்த்தியாகத்தை செய்து இருக்கிறார்கள் என்பதையும் மத்திய அரசு மறந்துவிடக்கூடாது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக சங் பரிவார் சங்கங்களோ ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களோ ஒரு துளி கூட போராட வில்லை என்பதையும் நாட்டு மக்கள் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் பாஜக மறந்து விடக்கூடாது. ஆகவே தொடர்ந்து இந்த பத்தாண்டு காலம் இஸ்லாமிய மக்களுக்கு மத்திய பாஜக அரசும் குறிப்பாக இந்துத்துவா இயக்கங்களும் பெரும் அநீதியை இழைத்துக் கொண்டு இருக்கிறது.

மேலும் ஜனநாயகத்தை மதச்சார்பற்ற நாட்டை துண்டாக்கி கொண்டு இருக்கிறது. அது ஒரு போதும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு என்பதை நினைவில் கொண்டு உடனுக்குடன் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும். இஸ்லாமிய தொப்புள் கொடி உறவுகளை நாம் பாதுகாக்க வேண்டும் என மத்திய ஆட்சியாளர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இந்த அறிக்கையின் வாயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து இதே போன்ற அத்துமீறல்கள்  நீடித்தால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசு நினைத்துப் பார்க்க முடியாத படு தோல்வியை சந்திப்பார்கள் என இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

செய்தியாளர் : யாசர்