திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:34 IST)

கேப்டன் வருவார், வெற்றிடத்தை நிறப்புவார் - பிரேமலதா பேட்டி!!

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை விஜயகாந்த் நிறப்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து உடல்நலம் வேண்டியும் குடும்பத்தினருக்காகவும் பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
அப்போது அவர், இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களின் பலத்தைத் வெளிப்படுத்துவதில் அனைத்து கட்சியினருக்கும் சிரமமாக இருக்கும். இரு பெரும் தலைவர்கள் இருக்கும்போதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த். 
 
எனவே அந்த தலைவர்களின் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார். அதற்குண்டான தகுதி அவருக்கு மட்டுமே உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கவே தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பின்பு விஜயகாந்த் அதுதொடர்பாக அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.