அதிமுக கூட்டணியில் யார் யார்? யாருக்கு எவ்வளவு தொகுதி? – இன்று வெளியாக வாய்ப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (10:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, இன்று தேமுதிகவுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக பாமகவுடனான பேச்சுவார்த்தையையும் அதிமுக மேற்கொண்டது.

இந்நிலையில் இன்று தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது. அதற்கு முன்னதாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து தேமுதிக – அதிமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை முடிய உள்ள நிலையில் இன்றே அல்லது இந்த வார இறுதிக்குள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :