திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (12:06 IST)

பேனர் வைத்தது தவறு தான்: ஜெயகோபால் ஒப்புதல்

பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், பேனர் வைத்தது தவறுதான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண்  சமீபத்தில், மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் மீது அதிமுக பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இது தொடர்பாக பேனர் வைத்தற்கு காரணமாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீஸார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து ஜெயகோபால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், பேனர் வைத்தது என்னுடைய தவறு தான் என ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை 14 நாட்கள் (அக்டோபர் 11) நீதிமன்றக் காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.