திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (12:03 IST)

ஜகா வாங்கிய பாஜக; பெருமூச்சு விட்ட அதிமுக: ப்ராப்ளம் சால்வ்!

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக தனித்து போட்டியிடவில்லை என்றும் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்க அதிமுக மறுத்ததால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவும் விருப்பமனுக்களைப் பெற்று வேட்பாளர்களிடம் நேர்காணல் செய்து வருகிறது. இதனால் அதிமுக யாருக்கு ஆதரவு அளிப்பது என குழம்பி இருந்தது. 
இந்நிலையில் இன்று, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக தனித்து போட்டியிடவில்லை என்றும் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் சற்று ஓய்ந்துள்ளது. அதோடு அதரவு இன்றி தனித்து போட்டியிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாஜக இந்த முடிவை எடுத்திருக்கும் என கூறப்படுகிறது.