வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (00:13 IST)

கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12,800 இடங்கள் காலி!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ”பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும். விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டு முதலே அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அனைத்து கல்லூரிகளிலும் அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர்.  ஆனால் மொத்தம் 1 லட்சத்து  51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இதனால் கலந்தாய்வுக்கு முன்பாகவே 12837 இடங்கள் காலியாகியுள்ளன.