அண்ணா யாரு தளபதி! – விஜய்யை அண்ணாவாக சித்தரித்து போஸ்டர்!

Vijay Poster
Prasanth Karthick| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (11:50 IST)
இன்று தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

இன்று தமிழக முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அண்ணா முகத்தை மார்பிங் செய்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில் ”எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா.. தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு தளபதி!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :