ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:51 IST)

100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள்..! விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு..!!

Actor Vijay
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
 
நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை பதிவு செய்து தனது ரசிகர் மன்றமான நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார்.
 
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.  
 
தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்,  புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும், 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து,  உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. புதிய மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற  தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.