1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk announcement of election controller in all districts

மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்.. தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..!

ADMK
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் இந்த தேர்தலை எதிர் நோக்க அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன.

ஒரு பக்கம் திமுக, கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறது.

சற்றுமுன் வெளியான தகவலின் படி மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணியினை பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக அதிரடியாக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து இருக்கும் நிலையில் திமுகவும் சுறுசுறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தண்ணீர் பைப்பை வைத்து வெடிக்கும் ராக்கெட்! - ஹமாஸ் வெளியிட்ட மேக்கிங் வீடியோ!