1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai order to appointment election observer

39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: அண்ணாமலை

பாஜக
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படும் என தமிழக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.
 
இன்னும் 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டதாகவும், தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
 
 அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பாஜக தனித்து ஒரு கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்து, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி.. ரூ.50,000 நிதி உதவி வழங்கிய அமைச்சர்