திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:37 IST)

சுதீஸின் மனைவியிடம் பண மோசடி- இருவர் கைது

sudheesh- His wife
தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் சுதீஸின் மனைவியிடம் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
தேமுதிக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுதீஸ். இவரது மனைவியிடம் வீடு கட்டித் தருவதாகக் கூறி அவரிடம் இருந்து ரூ.43 கோடி மோசடி செய்தததாக லோகோ பில்டர்ஸ்  நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, அவரது உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சுதீஸ் தரப்பில் புகாரளிக்கப்பட்டது.
 
இப்புகாரின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சந்தோஷ் சர்மா மற்றும் சாகர் ஆகிய இருவரையும்  இன்று கைது செய்தனர்.