1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (13:55 IST)

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.! தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு..!!

modi amithsha
மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. 
 
வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
புதுச்சேரிக்கு நிர்மல் குமார் சுரானாவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.