1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (09:08 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டிற்கான பார்வையாளர்கள் தேர்வு!

chess
சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டியை பார்ப்பதற்கான பார்வையாளர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் சதுரங்க போட்டிகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
 
மாவட்டம் தோறும் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது