வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 7 ஜூன் 2022 (16:54 IST)

பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி! வென்றால் செஸ் ஒலிம்பியாட் செல்ல வாய்ப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற 10ம் தேதி முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் முதல் இரண்டு மாணவர்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்காக சென்னை அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள செஸ் விளையாடும் மாணவர்களின் திறன் அதிகரிக்க உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.