1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (17:41 IST)

உலக செஸ் தரவரிசையில் மீண்டும் நுழைந்தார் விஸ்வநாதன் ஆனந்த்!

பிரபல இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற செஸ் விளையாட்டு வீரராக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் தற்போது நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்த தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் வீழ்த்தினார். இதன்மூலம் உலகளாவிய செஸ் தரவரிசையில் 9வது இடத்தை பிடித்து மீண்டும் டாப் 10 செஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஆகியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்