ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 14 ஜூன் 2024 (10:04 IST)

சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து!

பரமக்குடியில்  இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் நோக்கி லாரியில் பஞ்சு  ஏற்றிக்கொண்டு  சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பூசத்துரை (வயது 48) ஓட்டி வந்துள்ளார்.
 
அதிகாலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே  ஏரமநாயக்கன்பட்டி வழியாக லாரி சென்று கொண்டிருந்த போது  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
 
இதில் லாரியின்  முன் பகுதி தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது.இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர்  பூசத்துரை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார் திடீரென லாரி மோதியதில் ஏற்பட்ட பலமான சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இவ் விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.