தொடர்புடைய செய்திகள்
- விக்கிரவாண்டி எனக்குதான்..! அமமுக, பாமக இடையே போட்டி! விழி பிதுங்கும் பாஜக! – உடைகிறதா கூட்டணி!
- விக்கிரவாண்டியில் களமிறங்கும் பாமக.. பச்சைக்கொடி காட்டிய பாஜக.. விரைவில் வேட்பாளர் அறிவிப்பு..!
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! முன்கூட்டியே கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
- விக்கிரவாண்டியில் தனித்து போட்டி.. மாநில கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி அறிவிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதை அடுத்து ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 14ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது .
மேலும் வேட்புமனு பரிசீலனை ஜூன் 24ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெரும் கடைசி தேதி ஜூன் 26 ஆம் தேதி என்றும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
