திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (14:10 IST)

மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து...25000 பீர் பாட்டில்கள் சேதம்!

tasmac lorry accident
திருப்பூர் அருகே மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

தமிழகத்தில் அரசே டாஸ்மாக் கடைகளை  நடத்தி மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது.

இந்த நிலையில்  செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டம் நோக்கி மதுபானம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ஒன்று  இன்று திருப்பூர் அருகே கவிழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்த சுமார் 25,200 பீர் பாட்டில்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வ்ரைந்திய போலீஸார் இந்த விபத்திற்கான காரணம் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

லாரி விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19  ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலை உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளது.
குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.